உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22சிந்தாநதி






இல்லை, அந்தக் கேள்வியை ஒரு பதிலாகவே நான் படித்தேன். அதுவும் அந்தத் தருண விசேடம் தானா?

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா,தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா.

போன வருடம் இந்த வீட்டுக்கு நான் வந்திருந்த போது, என் தாயின் முதல் வருடச் சடங்குகள் முடிந்த கையோடு.

ஆகவே, இங்கே, இப்போ நான் தேடியது அவர் தாயாரையா? என் தாயாரையா?

பதிலை எதிர்பார்க்காமல், ஆனால் ஏதோ இன்ப ரகசியத்தில், சீண்டிக் கொண்டேயிருக்கும் கேள்வி. சிந்தாநதி ஓட்டத்தில், துள்ளு மீன்...?