பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- லா. ச. ராமாமிருதம் : 241 அம்மா என்னைப் பிடித்துக் கொள்கிறாள். "என்னடா கண்ணே ?’ பதறிப் போனாள். அம்மா என்னை லேசில் 'கண்ணே சொல்லமாட்டாள். 'அம்மா! அம்மா !” அம்மாவைவிட, 'அம்மா! அம்மா!'ன்னு அலர்றதுலே ஏதோ தனித் தைரியமாயிருக்கு. கூடவே அழுகை வரது. அழறேன். சிரிக்கிறேன். உடனே அழறேன். கூட வந்தவளில் ஒருத்தி என்னை ஒரு மாதிரியா பார்க்கறா. 'கொளந்தையைக் காத்து தாக்கியிருக்கு தம்மா ! மூஞ்சியே சரியாயில்லே ' குனிந்து பூமியிலிருந்து மண்ணைக் கிள்ளி, என் நெற்றியிலிட்டு, "துப்பு: துப்பு!” துப்புகிறேன். அவளும் துப்பறாள். என்னுள் விக்கல் அலைகள் படிப்படியாக அடங்குகின்றன. அப்பத்தான் அம்மா இடுப்பில் இழுத்துக் கட்டியிருக் கும் புடவைத் தலைப்புல ஏதேதோ முடிச்சு முடிச்சா என் மூஞ்சியை உறுத்தறது தெரியறது. தலைப்பைப் பிடித்து இழுக்கிறேன். மடியிலிருந்து கொட்டறது. "ஹாய், வேர்க்கடலை!” முதுகில் வாங்குகிறேன். இதுதான் சரி. இப்போ எல்லாமே சரி. சிந்தா நதியுள் ஒரு சின்னக் கோயில், சி ந - 16