பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 & சிந்தாநதி பதில். ஒரே பதில் என்பதில்லை. பதில்கள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், கேள்வி மட்டும் ஒன்று தான். கேள்விதான் நிரந்தரம் பதில்கள் அதைச் சுற்றி வரும் கிரஹங்கள். புலியின் மையத்தில் அதன் அமைதி என்கிறார்கள். கேள்வியும் அப்படித்தானோ? தன்னைச் சுற்றிப் புயலை எழுப்பிவிட்டுப் புயல் நடுவே ஆணித்தரமாக நின்று கொண்டிருக்கிறது. அதனின்று துளிர்ந்த சொட்டுப் போன்ற புள்ளிமேல், கேள்விக் குறியில், பாஷையின் பரிபாஷனையைப் பார்ப்போம். புயலின் நடுவே அமைதியை அடையாளம், முடிந்தால் கண்டுகொள். கேள்விக் குறியின் நர்த்தனத்தில். கால் கட்டை விரல் நுனிமேல் ஆடிக் கொண்டிருக் கும் ஆனந்தக் கூத்தன் தெரிகிறானா? சிந்தா நதியில் புயல்,