பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 & சிந்தாநதி ஏதோ விதத்தில் ஆன்மிக சம்பந்தம் உடைத்து என்பது என் கருத்து. நான் எழுத்தின் உபாசகன். ஐம்பது வருட ஈடுபாட் டுக்குப் பின் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறேன். எழுத்தின் பலிபீடத்தில், தவங்கிடந்து பெற்ற பிள்ளைக்கு இட்ட தங்கத் தொட்டிலிருந்து அவன் வளர்ந்து மனிதனாகி முழு வயது வாழ்ந்து முடிந்த பின் அவன் சிதைக்கு அடுக்கும் வரட்டிவரை- ஏன், பின்னர் அவன் அஸ்திகூட எடையாகிறது. அதன் தீர்ப்பில், சுயவிளம்பரம், ஆஷாடபூதித்தனம், நன்னம்பிக்கைகள், நாணயம் யாவுமே எம்மாத்திரை இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும்போது இது போன்ற சாட்டல்களுக்கும் தயாராய் இருத்தல் வேண்டுமல்லவா? எழுத்து ஒரு ருசி கண்ட சமாச்சாரம். அது வேறு விஷயம். - உயிரைப் பொருட்டாமல், மனிதன் ஏன் எவரெஸ்ட் ஏறுகிறான்? விபத்து போதிலும் ஏன் மோட்டார், குதிரை, ஸ்கூட்டர், இதரப் பந்தயங்கள்? ரயில், ஏரோப்ளேன், கப்பல் பிரயாணங்கள்? பொட்டாசியம் சயனைட் ருசி அறிய ஒரு பரிசோதனையாக அதை உட்கொண்டானாம்- சின்ன வயதிலேயே படித்தேன். ஆல்கலைன் டேஸ்ட்- அந்தச் சில நொடிகளுக்குள் சீட்டெழுதி விட்டான். ஏன்- ? ஏன்- ? ? ஏன்- ? ? ? சொல்லிக்கொண்டே போகலாம்.