உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 27


அவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக என் பிள்ளை

சொன்னான்.

அவன் விலாசம், வடபழனி தாண்டி - தெரியும். ஆனால் போகமாட்டேன்.

அன்று ராமன், அக்னி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனைச் சோதரனாக வரித்தான்.

இன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, அக்னி என் எழுத்தா?

ஜன்மாவின் தொட்ட பிசுக்கு-தொட்டாப் பிசுக்கு, மறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது. அப்போது வருவாயா?

அல்லது இன்னொரு வெங்கட்ராமனா?

சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன. சேர்கின்றன. பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன.