பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 293 இந்தப் பிரதிக்ஞை தவிர, பகவன்தாஸ் ஒன்றும் துறவி வாழ்க்கை நடத்தவில்லை. எல்லாம் தி பெஸ்ட் தான். ஆடை, மேக் அப், எதிலும். ஒருநாள் கூட மட்டன் இல்லாமல் முடியாது. உண்ணுவது என்னவோ உள்ளங்கை அகலத்துக்கு இரண்டு சப்பாத்திதான். தினம் அவர் இனத்திலிருந்து எத்தனையோ அழைப்பு கள் வரும். முண்டான், நிக்கா, வரவேற்பு, ஹாவன்எங்கும் போக மாட்டார். அவர் கை எப்போதும் துரக்கி யிருக்க வேண்டும்! "யாரிடமும் எதுவும் கேட்டும் வாங்க மாட்டேன். அவங்க கொடுத்தாலும் வாங்கமாட்டேன்.” ஒரு சமயம் அவருக்காக எதையோ தேடி, ஒரு டப்பா வைத் திறந்தால், அதில் ஒரு மைசூர்ப்பாகுக் கட்டியும், மிக்ஸ்சரும், உளுத்துக்கொண்டிருந்தன. நான் தீபாவ வளிக்கு என் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்தது. அவர் கொடுத்த ஹல்வாப் பெட்டிக்கு முன்னால் முடிந்த எதிர் மரியாதை! கோபப்பட்டு என்ன செய்வது? இதற்கெல்லாம் வெட்டிக்கொள்ள முடியுமா? நான் மாம்பலத்துக்கு குடி போன பிறகு, என்னால் தினம் அவர் விருப்பப்படி ஆஜர் கொடுக்க முடிய வில்லை. ஏதோ மாதம் ஒரு முறை. அப்புறம் உத்யோக ரீதியில் என்னை வெளியூர் மாற்றினதும், நாலு வருடங்கள் அறவே விட்டுப் போயிற்று. அவருக்கும் கடிதம்போடும் பழக்கம் இல்லை. எனக்கும் இல்லை. வேலையிலிருந்து ஒய்வு பெற்றதும், அம்பத்துாருக்கு நேரே வந்துவிட்டேன். எவ்வளவோ விஷயங்களுக்கு அம்பத்துரரும் சென்னைக்கு வெளியூர் போலத்தான்.