பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 & சிந்தாநதி எனக்கும் வயது உட்கார்ந்து கொண்டிருக்கிறதா? கூடவே உடல் நலிவுகள், இனி அவைகளின் ஓங்கல் j --അബ f * -سمم தானே! ஒருநாள் ஒரு ஆள் என்னைத் தேடிக்கொண்டு பிற்பகல் கொட்டுகிற மழையில் வந்தான். "உங்கள் வீட்டைக் கண்டு பிடிக்கிறதுக்குள். திரும்பிப் போயிட லாம்னே நெனச்சேன். ஆனால் நர்ஸ் அம்மா சும்மா விட மாட்டாங்க.” சீட்டைக் கொடுத்தான். நான் போகவில்லை. ஏனோ தெரியவில்லை. பகவன்தாஸை அந்த நிலையில் பார்க்க மனம் இடம் கொடுக்க வில்லை. தக்கை போன்று லேசாக வற்றிய உடல். குள்ளம் தான். குட்டையாக வெட்டிய ஸ்ம்மர் க்ராப். வெள்ளைக் குர்தா, வெள்ளை பைஜாமா. உடம்பில் எப்பவும் ததும்பிய ஒரு சுறுசுறுப்பின் நடமாட்டத்தில் பாதரrை "சரக் சரக்”- - - இந்த உருவமே நினைப்பில் நின்றுகொண்டிருக்கட்டும். வைரம் பாய்ந்த அந்த மனுஷனை வேறெப்படியும் பார்க்க, நினைக்க நான் விரும்பவில்லை. சிந்தா நதியின் அடி மணலில் தோன்றித் தெரிந்து உடனேயே புதைந்துபோன ஒரு வைரம். 令 , & o ళ్మీ• ళ్యి 4