பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 & சிந்தாநதி திரண்டாயிற்று. போகிக்கு ஒரு சொக்கர்பானைக்குக் கணிசமாகும். ஆனால் மனம் கேட்கவில்லையே. ரசீதுகள், கோயில் கும்பாபிஷேகப் பிரகடனங்கள், பிள்ளையாண்டான் காலேஜ் நாட்களில் எழுதிய கடி தங்கள், சில கோர்ட் தஸ்தாவேஜுகள், வீட்டுப் பத்திரம், உடைந்துபோன பேனாக்கள், தீர்ந்துபோன பாட்டரி லெல்கள், காலி அட்டைப் பெட்டிகள், சோப்பு உறைகள், -என் பெட்டி மற்றவர்களுக்குக் குப்பைக் கூடை. அழைப்புகள், கலியாணம், இலக்கியக் கூட்டம், புதுமனை புகுவிழா, ஆண்டு நிறைவு, லஷ்டியப்த பூர்த்தி, முண்டான் சடங்கு, இடையிடையே சில, மூலைகளில் கறுப்பு மசி தடவி, உருவில், தோற்றத்தில் வாசகத்தில் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! வருடக் கணக்கில் சேர்ந்துவிட்ட இவை இப்போ படையெடுப்பாக அசத்துகின்றன. ஏதோ ஒன்றை, கையில் பட்டதை எடுக்கிறேன். என்னுடைய திருமணப் பத்திரிகை. 1-7-1946. சுவரில், படத்திலிருந்து அப்பா புன்னகை புரிகிறார். “ஏண்டா, என்னுடையதும் இருக்கா பாரேன் ! கிடைத்தால் <! ##ffiliu(§as; jãapaba). Magic box, Pandora's box, too. இந்தப் பத்திரிகைகளில் சிலவற்றில் காணும் பெயர்கள் இந்த தூர இடைவேளையில் நினைப்பில் இல்லை. அப்படியே மங்கலாகத் தெரிந்தாலும், முகம் மறந்து போச்சு. இதுகளை இனி என் செய்ய அனாவசியமாக இடத்தை அடைத்துக்கொண்டு. கிழித்து எறிய வேண்டி யதுதான். இல்லை, கலியானப் பத்திரிகைகள். அச்சானி யம். இடம் கொடுக்கவில்லை. திரியாகக் கத்தரிக்கலாம், அதுவும் சேதிப்புத்தானே! பின்பக்கம் காலி. பால் கணக்கு, வண்ணான் துணி விவரங்கள், மளிகை லிஸ்ட்