பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சருகுகள் வெய்யில் உச்சியை எட்டவில்லை. ஆனால் பிளக்க ஆரம்பித்து விட்டது. என்னைச் சுற்றிலும் ஒரே காகிதக் குப்பை, பெட்டியில் இன்னும் இதைப்போல் இரண்டு பங்கு. -பெட்டியா? பெரிய ட்ரங்க். பெரிய டாங்க். என் புத்தகங்கள், என் எழுத்துக்கள், என் கடிதங்கள், என் அடைசல்கள். பூட்டு இல்லை, உடைந்த தாழ்ப்பாள், கீல் கழன்று கீச் கீச். இந்த ஜங்கிளுள் புகுந்துவிட்டால், நேரம், சோறு போனதே தெரியாது. இடையில் பின்வாங்க முடியாது. இதிலிருந்து என்னென்ன வெளிப்படும், எனக்கே தெரியாது. புலி, கரடி, புருஷாமிருகம், பூதம்- என் விதியுடனேயே சந்திப்பு நேரலாம்- 'சுருக்’- தோளைக் குடைந்து கொண்டு மண்டைக்கேற்ற எந்நேரம் ஆகும்? ஐயா, பெட்டி அத்தனை பெரிது. அதனினும் பெரிது அதில் சேர்ந்திருக்கும் கூளம். முதலில் என் கையெழுத்துப் பிரதிகளைச் சொல் லுங்கள். முதல் வார்ப்பு, இரண்டு, மூன்று. சில பக்கங்கள் எட்டு, பத்து. திரும்பத் திரும்ப, இப்படியே மலை