பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 59 ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக் கிறது. காலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் கூடின யுகத்தில் கூடினமே யுகம். யுகமே முகம் எனக் காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscope opš GT5 ILjenigis uufrif? -பழைய ஆகமம், புது ஆகமம், eேnesis மத்தேயு, Psalms... -ஸ்ரி கம பத நி வித வித கானமு வேதலாரம் -பார், பார், பார் ? எனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம். - அனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க் கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன. அனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன். கதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள் கிறேன். பாஷையின் ரஸவாதம். அனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன். -ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், லோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர் களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில்,