பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 73 உன் கண்களில் ஒளி, உன் மண்டையில் ஊறும் மாணிக்கம். நெற்றி, உன் வான். உன் புருவ நடுவில் யாக குண்டம். உன் விஷத்தைச் சிந்தாதே. சேமி. அத்தனையும் மாணிக்கம். ★ உண்டு என்றேன், உடனே இல்லை என்றேன். இரண்டுமே இல்லை என்று கண்டேன். இரண்டுமே வேண்டாம். வேண்டும் என்றேன்; உடனே வேண்டாமென்றேன். இரண்டுமே வேண்டாமென்று இப்போது கண்டேன். ஆசைப்பட்டுப் புன்னகையிலோ, வெறுத்த சுளிப்பிலோ, என் முகம் கோணுவானேன்? என் கோபுரம் சாய்வானேன்? ★ நான் விந்தியா, நான் மேரு. நான் வான். நான் நித்யன்.