பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


"மதுமலர்த் தேனையுண் டிருந்த வண்டினம்
புதுமணச் சுரும்பொடு இசைத்த பொங்கிசை
சதுமறை முகம்மது தழைத்து வாழ்கவென்று
அதிவிதப் புகழெத் தறைதல் அன்னதே".[1]

இன்னும் ஒரு பாடலில் தேனுண்ட வண்டுகள் முகம்மதுவின் புகழைப் பாட, களிமயில்கள் நடனமாடுவதாகக் கற்பனை செய்திருக்கிறார் உமறு,

"வரிபசுத் தோடு விண்டு மென்முகை அவிழ்க்கும்பூவி
னரியளி குடைந்து தேனுண்டு அகமுதின் புகழைப்பாட
மரகதக் கதிர் விட் டோங்கு மணிச்சிறை விரித்துநீண்ட
கரைகளிற் றருவி னீழற் களிமயில் ஆடு மன்றே" [2]


காவியத் தலைவனுக்கு ஏவல் செய்யும் இயற்கை

முகம்மது நபி, குழந்தையாய் இருக்கும்போது, அவருக்கும் பாலூட்டும் பேற்றினைத் தரும்படி விலங்குகள் அனைத்தும் வாய்திறந்து கேட்பதாகப் பாடியிருக்கிறார் உமறு.

"நான்மறை நபியைஎம் இடத்தில் நல்கினால்
பால்முலை கொடுத் தியாம் பரிப்பம் தம்மென
மான்மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து
ஈனமில் லவன்தனை இரந்து கேட்டவே"[3]

விலங்குகளைப் போலவே பறவையினங்களும் பாலனைத் தம்மிடத்தில் தரும்படி வேண்டுகின்றன.

"இரைத்தெழும் புள்ளெலாம் ஏகன் தன்னிடத்து
உரைத்திடும் எங்கள்பால் உதவின் அந்நபி


  1. 1. சீறா. புனல் விளையாட்டுப் படலம் 19
  2. 2. சீறா. இசுறா காண் படலம் 17
  3. 3. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 3