பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இங்கே சிக்கந்தர் என்னும் துல்கருனைன் ஆட்சி குறிப்பிடப்படுகிறது. துல்கருணைன் எனப்பட்டது மகா அலெக்சாந்தர் என்பவரே என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும் மகா அலெக்சாந்தர் கி மு 356-லிருந்து 323 வரை வாழ்ந்தவர் பல நாடுகளை வெற்றிக்கொண்டவர் ஐரோப்பா. ஆசியா, ஆஃப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களினதும் வரலாற்றையே மாற்றியமைத்தவர் எனப் பாராட்டப்படுபவர். அவர் 33 ஆண்டுகளே உலகில் வாழ்ந்தார் எனினும் அவருடைய செல்வாக்குப் பல நூற்றாண்டுகளுக்கு உலகில் நிலவியது 'தமது வெள்ளிய குடையின் கீழ் தெள்ளிய அலைகளை எரியா நிற்கும் கடல்களும் மலைகளும் அடங்கும்படி, குற்ற மேதும் இல்லாத சிங்காசனத்தில் வீற்றிருந்த சிக்கந்தர் என்னும் இயர்பெயரையும் துல்கருனைன் என்னும் காரணப் பெயரையும் கொண்ட பேரரசர் அரசு செய்யும் காலத்தினின்று மறுவற்ற கணக்கிலே எண்ணுாற் றென்பத்தோர் வருடத்தில்' அண்ணல் நபி (சல்) அவர்கள் பிறந்தார்கள் எனக் குறிப் பிடுகிறார் உமறுப்புலவர். மகா அலெக்சாந்தரின் ஆட்சியிலிருந்து 881 வருடங்களுக்குப் பின்னரே நபிகள் பெருமானார் பிறந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 881-லிருந்து நபிகள் பெருமானார் பிறந்த கி.பி. 570.ஐ க் கழித்தால் 311 என வருகிறது. எனவே இது கி.மு. 311 ஆகும். கிறித்தவக் கணிப்பின்படி ஒர் ஆண்டில் உள்ள நாட்களுக்கும் மகா அலெக்சாந்தரின் ஆட்சியினை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படும் ஆண்டில் உள்ள நாட்களுக்கும் வித்தியாசம் இருத்தல் வேண்டும். இவ்வாறு முன்னைய ஆண்டை விட பின்னைய ஆண்டில் ஏறக்குறைய 15 நாட்கள் குறைவாகவே இருத்தல் வேண்டும். இவ்வாறு பார்க்கும் பொழுது மகா அலெக்சாந்தரின் ஆட்சி முடிவுற்ற கி.மு. 323-லிருந்தே இக்கால எல்லை கணிக்கப்பட்டிருத்தல் வேண்டும், செய்த் அமீர் அலி அவர்கள் தமது Spirit of