பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

களில் ஒருவரை—உமறை அல்லது அபூஜஹ்லைத் தங்கள் பக்கம் சேர்த்துத் தருமாறு நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அல்லாஹ்யிடம் இறைஞ்சினார்கன்; து ஆ கேட்டார்கள். இந்த நிகிழ்ச்சியே இவ்வாறு சீறாப்புராணத்தில் அமைந்துள்ளது.

“வருட நான்குசென் றைந்தினின் முகம்மது மொருநா
ளிரவி னிறநனித் திருத்திரு சரமெடுத் தேந்திப்
பொருலி லாமுத லிறைவனை யீறிலாப் பொருளை
யுருகு பெய்ம்மன வாக்கொடும் புகழெடுத்துரைத்தார்
உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண்
டலத பூஜகி னினிக்கொடு தீனிலை யதனைப்
பலனு றும்படி யெனக்கருன் பிறிதிலை யெனவே
நலனொ டுந்துஆச் செய்தனர் முகம்மது நபியே”[1]

அண்ணல் நபி (சல்) இவர்கள் து ஆ கபூல் செய்யப்பட்டது. அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டது நபிகள் பெருமான் (சன்) அவர்களைக் கொல்வதற்கு முற்பட்ட உமறு அவர்கள், பின்னர் திருக்குர் ஆனை ஓதிக்கொண்டிருந்த நமது சகோதரியையும் அவர்தம் கணரையும் துன்புறுத்தத் தலைப்பட்டார். அப்பால் திருக்குர் ஆனால் கவரப்பட்டார். இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபிகள் பெருமானார் (சல்) அவர்களிடம் ஓடோடிச் சென்றார். அண்ணல் நபி (சல்) அவர்களிடம் இஸ்லாத்தைத் தழுவவே தாம் வந்துள்ள மையை உமறு கத்தாய் (ரலி) அவர்களின் கூற்றாகவே உமறுப்புலவர் இவ்வாறு செய்யுள் யாத்துள்ளார்.

”வரிசை நபியே முகம்மதுவே வானோர்க் கரசே புவிக்கரசே
யுரிய தனியோன் முதற்றூதே யுமது கலிமா வுரைப்படியே

  1. சீறா உமறு கத்தாப் ஈமான் கொண்ட படலம் 23