பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


எனச் குறிப்பிட்டுள்ளார். இந்த நிபந்தனைக்கு மாறாக வேறொரு நிபந்தனையை இந்த உடன்பாட்டில் எழுதுமாறு கூறினான் சுகயில். இந்த ஆண்டு திரும்பிச் செல்லுங்கள். அடுத்த ஆண்டு வாருங்கள். அவ்வாறு வந்தால் உங்களையும் உங்கள் கூட்டத்தாரையும் ஹஜ்ஜையும் உம்றாவையும் நிறைவேற்ற விடுவோம்’ என்று ஒரு நிபந்தனை எழுதுமாறு கூறினான். இதனையே உமறுப்புலவர் இவ்வாறு வருணிக் கிறார்:

அம்மொழி பொருந்தா திந்த வாண்டினுக் ககன்று போகிச்
செம்மையா யெதிர்ந்த வாண்டின் மீண்டிவண் செறிந்த காலை
யும்மையாஞ் செறுத்தி டாம லுவந்து ஹஜ்ஜு முறாச் செய்ய
வெம்மையி லாது விட்டு விடலென வெழுது மென்றான்."


சுகயிலென்பவன் சொன்ன நிபந்தனையை எழுதும்படி அண்ணல் நபி (சல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அலி (றலி) அவர்கள் அவ்வாறே எழுதினார்கள். அதனை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கொடுக்க சுகயில் என்பவன் அதனைப் பெற்றுக்கொண்டு மிக்றசு என்பவனுடன் மக்க மாநகரை அடைந்தான். இந்நிகழ்ச்சி சீறாப் புராணத்தில் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.

"எழுதின ரலியு மன்னோ ரியைந்திடும் படியேசற்றும்
வழுவறக் கடுதா சின்கண் வரைந்தவுத்தரத்தை யென்றும்
பழுதிலான் றூதர் நல்கப் பரிந்தந்த சுகயில் வாங்கி
யெழுகென மிகற சோடிவ் விருவரு மக்கம் புக்கார்."[1]



  1. 1. சீறா, உமுறாவுக்குப் போன படலம் 87