பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையீல் ஹூதைபிய்யா என்னும் இடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையில் இடம் பெற்ற எல்லா நிபந்தனைகளும் சீறாப் புராணத்தில் வருணிக்கப் படவில்லை உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில் உள்ள உமறாவுக்குப்போன படலத்தில் உம்றா பற்றிய செய்தியையே விவரிக்க முற்பட்டாராகையால் உடன்படிக்கையில் இடம் பெற்ற ஏனைய நிபந்தனைகளை விட்டிருக்கலாம். முஸ்லிம்கள் அணியிலிருந்த பலருக்கு இந்த உடன்படிக்கையில் நியாயமற்றவை எனத் தோன்றிய நிபந்தனைகளைப் பற்றியும் அத்தகைய எதிர்ப்பினைத் தெரிவித்தவர்களைப் பற்றியும் உமறுப்புலவர் குறிப் பிடவில்லை. அந்தச் சம்பவங்களும் இந்தப் படலத்துக்குப் பொறுத்தமற்றவை எனக் கருதப்பட்டிருக்கலாம். மக்காக் காபிர்களின் சார்பில் உடன்படிக்கையில் கைச்சாத்ததிட்ட தீமையே உருவெடுத்தவர்களான சுகயிலும் மிக்றசும் மக்காவுக்குத் திரும்பிச் சென்று விட்டனர். ஆனால் நபிகள் பெருமானார் (சல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் அவ்வாறு திரும்பி மதீன மாநகருக்குச் சென்று விடமுடியாது. ஏனெனில் அவர்கள் ஒரு குறிக்கோளை நிறைவேற்றவே அங்கு வந்தவர்களானர். ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட உம்றா நிறைவேற்றும் நோக்கததோட அவர்கள் அங்கு வந்தார்கள்.ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட உம்றாநிறைவேற்றும் நோக்கத்தோட அவர்கள் அங்கு வந்தார்கள். அதற்காக நிய்யத்தை வைத்திருந்தார்கள் அந்த அவர்களது நிய்யத்தை எண்ணத்தை நிறைவேற்றும் முகமாக ஒர் ஒட்டகத்தைக் குறுபானி கொடுததார்கள். அர்ப்பணித்தார்கள். உடலில் கததுரி மணம் (நாணம்) கமழும் அண்ணல் (சல்) அவர்கள் இவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து நியாயத்தை நிறைவேற்றியமை பற்றி இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.

"மாயத்தின் வடிவ தாக வந்தவர் போய பின்னைச்
காயத்தி னானம் வீசும் பீபுஜூ முறாச் செய்ய