பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169


நீயத்து நினைந்த தன்மை தடையற நீங்க வேண்டித்
தேயத்தோர் புகழ்வொட்டை யறுத்துநற் குறுபான் செய்தே."[1]

ஹூதை பிய்யா உடன்படிக்கையை விவரித்த பின்னரே உமறுப்புலவர் உதுமான் (றலி) அவர்கள் மக்காவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார். நபிகள் பெருமானார் உதுமான் (றலி) அவர்களை வேண்டியதும் அவர்கள் அங்குச் சென்றதும் ஒரு செய்யுளில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது.

"மடிவிலா வுதுமா னென்னும் வள்ளலையினிதுகூவித்
துட வைசூழ் மக்க மென்னுந் கொன்னகக்க கேகு மென்னப்

படிபுகழ்ந் தேத்த வன்னோர் பரிவு மகிழ்ந்து போனார்"[2]

அண்ணல் நபி (சல்) அவர்களும் தோழர்களும் மதீன மாநகரை நோக்கி நடந்தார்கள் என்றும் பின்னர் மக்க மாநகரிலே உதுமான் (றலி) அவர்களை எதிரிகள் கொன்று விட்டனர் என்று ஒரு வதந்தி பரவியது என்றும் வருணிக்கப்பட்டுள்ளது.

“......... மதீன முதுரர் வளநகரடுக்கும் போதிற்
றரைபுகழ் மக்கந் தன்னிற றகைபெறு முதுமா னென்னுங்
குரைகழற் கோவைக் கொன்றா ரெனுமொழிபிறந்த தன்றே"[3]

இச் செய்தி முஸ்லிம்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. வெற்றி வாழ்வு அல்லது வீர மரணம் என்னும்


  1. 1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 88
  2. 2. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 105
  3. 3. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 106