பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218



எழிதருங் குபிரை நீச்கி யகுமது தீனை நோக்கிப்

பொழிகதிர் வதனச் செவிப் புரவல ருமறு நின்றார்."[1]

செங்குருதி சிந்தி உடன்பிறந்தான் உள்ளத்தில் ஈமான் பிறக்கச் செய்த பெருமை பாத்திமாவைச் சேர்கிறது,

துன்பத்தை வீரத்துடன் பொறுத்ததன்றித் தன் நல்லுயிரையும் ஈந்து தீன் வளர்த்த பெண்ணரசி "அன்னமென்னடைச் சுமையா' என்பார். ஈமான் கொண்டு இஸ்லாமானவர்களில் சிலரைப் பிடித்து வருத்தி உயிர்விடும் வண்ணம் காபிர்கள் துன்புறுத்தினர்; சிலரை ஏசினர்; சிலரைப் பல புன்மொழிகளால் வெருட்டினர்; சிலரைக் கடிந்து கொண்டனர். சுமையாவின் குடும்பத்தினரையும் அவ்வாறே பிடித்துத் துன்புறுத்தினர். அம்மார் என்பவரின் தந்தை ஆசிர், தாய் சுமையா, தமக்கை ஒருத்தி ஆகிய நால்வரையும் பிடித்துப் பொது இடத்தில் வைத்து நன்கு புடைத்தனர். அவர்கள் கால்களையும், கைகளையும் சேர்த்து இறுக்கிப் பிடித்து பிணைத்து 'வெடித்திடச் சுடும்பரல் வெயிலில்’ கிடத்தினர்.

எதிர்க்கும் திறனற்ற நால்வரும் துன்பம் தாங்காது மனமேங்கிக் கண்ணிர் பெருக்கினர். கணவனும் மனைவியும் மக்களுமாகிய நால்வரும் ஒருவர்படும் துன்பத்தை ஒருவர் காணப் பொறுக்காது தவித்தனர். எனினும் தீன் வழியை விட்டுப் பிறழ்தல் கூடாது' என்ற உறுதி அவர்கள் உள்ளங் களில் உரம் பெற்று வளர்ந்தது. துன்பம் பொறுக்கமாட்டாமல் அழுது துடித்த அவர்கள் வெயிலின் வெம்மையில் தோல் கருகி, உள்ளம் உடைந்து, உள்ளீரல் வற்றித் துன் புற்றபோதும் கொடிய காபிர்கள் விடவில்லை. பழிகூறி இகழ்ந்து முன்னே கைகால்களைப் பிடித்த பிடிப்பை இன்னும் இறுக இறுக்கி, வற்புறுத்தி கொடுந்தொழில் செய்தனர். நால்வரும் சூரிய வெம்மையினாலும், பூமியின் வெம்மையினாலும் புழுவாய்த் துடித்தனர்.


  1. 1. சீறா, உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் 77