பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


உமறு. உண்மையில் கோமான் நபியவர்களின் வாழ்வில் நிகழ்ந்ததாக உலமாக்களால் கருதப்படாத எத்தகைய அதிசயச் செயல்களுக்கும் தம் மாபெரும் காப்பியக்தில் உமறுப்புலவர் இடந் தரவே இல்லையென உறுகியாகக் கொள்ளலாம்.'1 "இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் மெய் வரலாறுகளை மட்டுமே கொண்ட புராணங்களே உண்டு' என்பது உண்மை.

பெருமானார் காட்டிய இயற்கை கடந்த நிகழ்ச்சிகனை நபி பட்டத்திற்கு முன்-பின் என இருவகைப் படுத்துவர் முன்- "விலாயத்" என்றும், பின்- முஃஜிஸாத்து’ என்றும் கூறுவர். இருவகையும் இறை அற்புத ஆற்றல்களே. எனவே, இவற்றை இக்கட்டுரையின் கண் ஒரே தலைப்பினுள் காண்போம்.

உமறுப்புலவர் அதிமானுட நிகழ்ச்சிகளைத்தேடி அலையவில்லை. கற்பனை செய்யவுமில்லை. கற்பனை கலக்காத இறைத் தூதருக்கு ஏற்பட்ட, வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகளே-காப்பியப் பாங்கினில்-மரபினில் இயற்கை கடந்த செயல்களாகவும் பாத்திரப் படைப்புகளாகவும் அமைந்து விடுகின்றன. அவற்றினுள் பலவற்றினைச் சீறாப்புராணப் படலங்களில்-தனிப் படலங்களாகவும் சிலவற்றினை பிற படலங்களினூடேயும் பாடி நிறைவு செய்து செய்து பெருமைப்படுத்தியுள்ளார். காப்பிய மரபு போற்றியுள்ளார்.

சீறாவில் இயற்கை கடந்த செயல்கள்-பாத்திரங்கள் -செய்திகள்

சீறாவில் வானவர்கள், வானவர்கோன் ஜிபுரயீல் (அலை) பிற முக்கிய வானவரான மீக்காயில் (அலை), ஜின்கள், மலை


1. "ஜாகிர் உசேயின் கல்லூரி" உமறுப்புலவர் கருத்தரங்கு மலர்.... சீறாவின் காப்பிய நலன்கள்', கட்டுரை ஹைதர் அலி.

2. "இலக்கியப் பேழை". நபி பிறந்தனரே கட்டுரை KPS ஹமீது

3. "இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள். 1968. "சீறாப் புராணம் கட்டுரை எஸ். ஏ. செய்யிது ஹஸன் மெளலானா பக். 135.