பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

எனப பதிலுரைத்தான். வேடனின் வேண்டுகோளின்படி இகபர இரட்சகர் முகம்மது,

"இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும்

வனமுறை யஃறினை வாழ்த்துகின்றது

நனிடக ழுண்மை நன் னபியு நீரலாற்

பினையிவ ணிலையென வுடும்பு பேசிற்றே." [1]

உடும்பு முகம்மதுவை 'நபி' என்றும், இஸ்லாம் மார்க்கமே சிறந்த பார்க்கம் என்றும் பேசியது. இவ்வாறு உடும்பு வாய் திறந்து உரையாடியதைக் கண்ட வேடன் இஸ்லாத்தினை தழுவினான். உடும்பினை விடுதலை செய்தான் எனும் இயற்கை கடந்த செயல் காட்டுவது இப்படலம்,

மதியை அழைப்பித்த படலம்

திமிஷ்க் அரசர் ஹிபீபு பெருமானாரிடம் அற்புதம் நிகழ்த்த வேண்டி நின்றார். அதன்படி அமாவாசை இருளில் அழகிய முழு நிலவை வரவழைத்து அதை இருகூறாகப் பிளவுபடச் செய்து அதன் வாயாலே பேசவும் வைத்தார்கள் இதனை விவரிப்பது இப்படலம்,

தசைக் கட்டியைப் பெண்ணுருவைமைத்த படலம்

மதியை அழைத்த மறுநாள் வள்ளல் நபி அவர்களிடம் அரசர், கட்டி உருவாய், மாமிச கோளமாய், எலும்பின்றி நரம்பின்றி எழில் குன்றி நெளியும் புழுவுக்குச் சமமாக உள்ள தமது மகவைப் பெண்ணுருவாக்கித் தருமாறு வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப, நபிகள் நாயகம் அத்தசைக் கட்டியை அழகு மிக்க ஆரணங்காக ஆக்கித் தந்தார்கள். இது பற்றி பகர்வது இப்படலம். இப்படலம் காப்பியச் சுவைமிக்கது என்பது இவண் குறிப்பிடத்தக்கது.

  1. 1.சீறா. உடும்பு பேசிய படலம் 34