பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலத்தினூடே ஒரு அற்புதம்.

ஹபீபு அரசர் தன் அருமை மகள்- 'தசைக்கட்டி' எழில் மங்கையாக தன்முன் வரக்கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார். அவண் கடிதில் கலிமா மொழிந்து அரசரும் தம் பரிவாரங்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். திமிஷ்கு சென்றபின் மன்னர் நன்றியறிதலாக ஏராளமான பொருட்களை ஒரு ஒட்டகத்தின் மீது ஏற்றி பெருமானாருக்கு அனுப்பி வைத்தார். இச் செய்தி அறிந்த தீமை புனை அபூஜஹல் அப் பொருள்களெல்லாம் தனக்கு வந்ததாக அறிவித்தான். அண்ணல் முகம்மதுவுக்கு அனுப்பப்பட்டதல்ல என வாதிட்டான். அந்த ஒட்டகமே வாய் திறந்து,

"வரிசை நாயகன் றுதெனு முகம்மது நபியே

யரசர் கேசரி ஹபீபெனுந் திமிஷ்க் கரச

ரிரசி தம்பணி மணிதம ணியமிவை யனைத்தும்

பரிசனத்தொடு நுமக்கனுப் பினரெனப் பகர்ந்த," [1]

என பெருமானாருக்கே ஹபீபு அரசன் கொடுத்தனுப்பிய பொருட்கள் எனச் சான்று பகர்ந்ததை இப்படலம் பேசுகிறது.

மானுக்குப் பிணை நின்ற படலம்

பெருமானார் வேடன் வலையில் அகப்பட்ட மானொன்று வேண்டிக் கொண்டதனால், அதனைத் தன் குட்டிகளுக்குப் பாலூட்ட அனுப்பி- வாய் மெ காதலுக்காக அந்த மானுக்குத் துணிந்து உயிரை நல்க வரும் உயிர் அற்புதம் விரித்துரைப்பது இப்படலம்.

ஈத்தங்குலையை வரவழைத்த படலம்

காட்டரபி ஒருவன் பெருமானார் சமுகத்தில் அற்புதம் காண வேண்டி விழைந்தான், எதிர்நின்ற ஈந்த மரத்தின்

  1. 1. சீறா. ஹமீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் 37