பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256


'தூரமாகி விட்டவன்'-'விலகி விட்டவன்' எனப் பொருள் பகர்வர். அதாவது இறை வழியிலிருந்து-அறத்திலிருந்து தூரமாகி விட்டவன் என்பதாம், மனித குலப் பண்பை விட்டு விலகி மறப்பண்புமிக்க கலகக்காரன் என்பது ஆகும். 'ஷய்த்து' என வேர் கொண்டு கோபத்தால் எரிக்கப்பட்டவன் என்று பொருள் கொள்வாரும் உளர். திருமறையில் 'இபுலிசு' என்றும்; "சைத்தான் பகரப்படுகிறது".[1] எந்த நற்செயல்களைத் தொடங்கு முன்பும், குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் முன்பும், 'சபிக்கப்பட்ட ஷைத்தானிடத்திலிருந்தும் பாது காப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். (6;80) எனும் இறை கட்டளைக்கு இருவகையாகப் பொருள் கொள்வார். (i) கண்ணுக்கு மறைவானவன் (ii) கட்புலனாகும் தீமை மிகு வெறுக்கத்தக்க மனிதன். ஷைத்தான் இறைக் கட்டளைக்கு எதிர்மாறான குணம் படைத்தவன். அமரர் (மலக்) இனத்தைச் சேராதவன். தருக்கும் செருக்கும் மிக்கவன். மறப்பண்புகளை உருவகப்படுத்தும்-உருவாக்கம் பெற்றவன் ஷைத்தான் எனலாம். நன்மையான செயல்களைச் செய்யும்படித் தூண்டுவது அமரர்களின் தத்துவம். அதனைத் தடுத்து மனத்தைத் திருப்புவது சைத்தானின் தததுவம். "ஆதிக்கு உவந்தோன் இபுலீசானவனுக்குப் பகைவன், இபுலீசுக்கே உவந்தோன் இறைவனுக்கே பகைவன்" என்கிறது இபுலீசுநாமா. இபுலீசு (சைத்தான்) பற்றி பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டபோதிலும் அவனுக்கு எனத தனி உருவமில்லை என்பது தெளிவு. தீக்குணங்கள் எல்லாம் அவன் உருவமே எனில் வேறில்லை. "சைத்தானியத" எனும குணககேடுகளே சைத்தான் என உருவகப்படுத்தப்படடது எனின் மிகப் பொருத்தமாம். இதனை உறுதிப்படுத்துவது போன்று திருமறையின் (அத் 5:91) "ஷைத்தான் நுழைவதெல்லாம் மயக்கப் பொருள்களையும்

  1. 1. சைத்தான் என 52 இடங்களிலும், இபுலீஸ் என 9 இடங்களிலும் திருக்குர்ஆனில் வந்துள்ளன என்றும் கூறுலர்.