பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286


பதிகாரம்: பதிகம்: 54) எனவே பொருள் பொதிந்த சொல்லாக விளங்கும் கலிமா கரும்பிலும் இனிமையானது கரும்போ கண்-மரக்கண் உடைய கரும்பு. இக்கருத்துக்களையே உமறுப் புலவர் ஒரு செய்யுளின் ஒரு அடி யில் குறிப்பிகிெறார்

'கண்ணுடைக் கரும்பின் சுவையினு மினிய
கட்டுரை நெறிக்கவி மாவை",[1]

அலைகளை உடையது சமுத்திரம். அந்தச் சமுத்திரத்திலே இருந்து அமுதம் பெறப்பட்டதாகக் கூறுவர். அந்த அமுதம் பேரமுதமாக விளங்குகிறது. அத்தகைய பேரமுதத்தையும் விட இனிமையானது ஒன்று இஸ்லாத்தில் உண்டு. பேரமுதம் அதற்கு நிகராகாது. அது தான் இஸ்லாமிய மூல மந்திரமான கலிமா. இக்கருத்துக்களே ஒரு செய்யுளில் இவ்வாறு அமைந்துள்ளது,

"உடைதிரை யமுத மொவ்வா தோதிய கலிமா” (தீனிலை கண்ட படலம் 161). இனிமையான வாக்குடையவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்கள். அத்தகைய இனிமையான வாச்கினால் சொல்லுதற்கரியது புறுக்கான் வேதம். புறுக்கானோ மதுரமான சொற்களைக் கொண்டது. இவற்றை எடுத்துப் பிரித்து விளக்கினார்கள். இவ்விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கத்துக்கு வந்திருந்த அன்றைய மதீனா வாசிகள் உள்ளமும் உடலும் பூரிப்படைந்தனர். இவற்றினால் கவரப்பட்டமையால் அவர்கள் சுவையைப் பொறுத்த வரையில் அமுதத்துக்கும் மிக்க இனிமையான கலிமா என்னும் மூல மந்திரத்தை மொழிந்து இஸ்லாத்தில் சேர்ந்தனர். இதனையே சீறாப்புராணம் இவ்வாறு விவரிக்கிறது.

...............முகம்மதின் மதுர வாக்கின் விள்ளரு மறையின் றீஞ்சொல் விடுத்தெடுத்துரைப்பத் தேறி

  1. 1. சீறா. தனிலை கண்ட படலம் 109