பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300


என்று வருணிக்கிறார். ஐவேளைத் தொழுகையைப் பற்றியும் நோன்பைப் பற்றியும் ஹஜ்ஜைப்பற்றியும் குறிப்பிடுகையில் அவற்றை இவ்வாறு அமைத்துள்ளார்.

'......காலமைந்துத் தொழுகை வென்றுங்
தூதார யுமையிருக்க வனுப்பினதும்
காதலுடன் ஸ்க்காத்து நோன்பு ஹஜ்ஜும்
பறுளெனவே சுழறு மைந்தும்". [1]

ஹஜ் என்னும் அறபுச் சொல்லின் நேரடிக் கருத்து புறப்படுதல்': ஒரு திசையை நோக்கிச் செல்லுதல் ன்ன் பனவாகும். இஸ்லாமிய பரிபாஷையில் ஹஜ் என்னும் சொல் புனித பயணத்தைக் குறிப்படுகின்றது. இஸ்லாமிய ஆண்டிலே வரும் பன்னிரண்டாம் மாதமான துல் ஹஜ் மாதத்திலே மக்க மாநகருக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் புனித பயணத்தையே இச்சொல் குறிப்பிடுகின்றது. இஸ் லாமிய கோட்பாடுகளும் ஐந்தாவதான ஹஜ் எல்லா வசதிகளும் உள்ள முஸ்லிம்களால் வாழ்க்கையில் ஒரு முறை யாவது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும். ஹஜ்ஜும் உமறாவும் பற்றி திருக்குர் ஆனிலே (2; 163 197) குறிப்பிடப் படுகிறது. துல் ஹஜ் மாதம் முதற்பத்து நாட்களிலே ஹஜ் நிறைவேற்றப்படல் வேண்டும். ஆனால் உமறாவோ ஒர் ஆண்டில் எப்போதாவது நிறைவேற்றக் கூடிய தொன்றா குமி.

சீறாப்புராணத்திலே பல இடங்களிய் ஹஜ் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. அபூ லஹப் உட்படக் குறைஷிக் காபிர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் எதிர்க்க முற்பட்டனர். ஹஜ் தினத் தன்று அண்ணலாரைத் தீர்த்துவிடவேண்டும் என்று ஆலோசித்தனர், இதனையே உமறுப்புலவர்

  1. 1. சீறா. உசைனார் பிறந்த படலம் 1