பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305


நேரத்தைக் குறித்து வச்த் என்னும் சொல் திருக்குர் ஆனிலே (7,1197, 15:38) இடம் பெற்றுள்ளது. இச்சொல் சீராப்புராணத்திலே,

"இற்றைநாட்டொடுத்தைந் தொகுத்தினும்..."[1]

"அஞ்சொகுத்தினும்' [2]

"இந்த, ஒருத்தினில்" [3]

ஒகுத் எனச் சற்றுத் திரிந்து ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம்.

ஸலாத் என்று வழங்கப்படும் தொழுகையை நிறைவேற்ற உளத்தூய்மையும் சரீரசுத்தியும் இன்றியமையாதனவாகும். திருக்குர் ஆனிலும் இது வலியுறுத்தப்படுகின்றது. (5:7, 4:43), தண்ணீர் பெறமுடியாத சந்தர்ப்பங்களில் தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறைமையும் குறிப்பிடப்படுகின்றது. முன்னது 'வுலு' பின்னது 'தயமும்' என்றும் அறபியில் வழங்கப்படுகிறது. தொகையையும் அதற்கு இன்றியமையாத சரீர சுத்தியையும் நிறைவேற்றும் விதத்தினை விண்ணவர் கோமான் ஜிபுறீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களுக்குப் போதித்த நிகழ்ச்சி சீறாப்புராணத்தில் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.


"பெருகிப் பரந்த புனற்கரையிற் பெரியோன் றூதை யருகிருத்தி
மருவு மலரு மெனவுலுவின் வகைபுந் தொகையும் வரவருத்திக்
குரிசி னபியைப் பின்னிறுத்திக் குறித்த நிலைரண்டிறக்க அத்துப்
பிரிவுற் றொழுவித் திருந்துவிண்ணிற் படர்ந்து சுவனத்தலத்துறைந்தார்"[4]


20

  1. 1.சீறா .உகுபான் படலம் 10
  2. 2.சீறா. பாத்திமா திருமணப் படலம் 73
  3. 3.சீறா. அபூதல்ஹா விருந்து படலம் 5
  4. 4.சீறா. தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 38