பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


உலாவந்து கொண்டிருந்த வாலை வாரு தியென்ற வட நாட்டுப் புலவரை தம் அரசரின் அவைக் களத்தில் சந்தித்தார் பாலப் பருவத்திலிருந்த உமறுப் புலவரைப் பார்த்த அப்புலவர். "எம்மை வாலைவாருதி என்றறியாயோ, பிள்ளாய்' எனக் கேட்டதற்கு,

"திமிர் பகைவரை வென்ற பருதியெனும் எமதெட்ட
சீரனணி வாயில் வித்வான்
உமறுகுமு றிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்"

என்று முழங்கி தம் ஆசிரியரின் புகழையும் தம் புகழையும் உயர்த்தினார்.

இக்காலத்தில்தான் ஈத்துவக்கும் இன்பத்தையே இலட்சியமாகக் கொண்டிருந்த வள்ளல் சீதக்காதி, "மரகதம், வச்சிரம், வைடுரியம், நீலம், அரவின் மணி, புஷ்பராகம், கோமேதகமும், செம்பது மராகம், பவளம், மலாக்கா கஸ்தூரி, அம்பர், குதிரை, யானைத்தந்தம் முதலியவற்றில் வாணிபம் செய்து பெற்ற பணத்தை "அள்ளிப் பல திசையும் அட்டகிரிபோல் குவித்து." அதை வாரிவாரிக்கொடை கொடுத்து வந்தார் படிச்காசுப் புலவர், நமசிவாயப் புலவர் கந்தசாமி புலவர் ஆகியோரின் உற்ற நண்பராகவும் இருந்தார் அவர்.

"தினங் கொடுக்கும் கொடையானே, தென் காயற்பதியானே சீதக்காதி," என்று பாவலர் போற்றி வந்த இப்பெருமகனார் இயற்பெயர் ஷெய்கு அப்துல் காதிர் மரைக்காயர். ஹலரத் அவுரங்கஸீப் ஆலம்கீர் பாதுஷாவின் பிரதிநிதியாகவும் இவர் வங்காளத்தில் சில காலம் ஆட்சி செய்தார். சீதக்காதியின் நுண்ணறிவையும், இலக்கியப் பண்பையும் நிர்வாக ஆற்றலையும் கேள்விப்பட்ட தென் பாண்டி மண்டல வேந்தன் கிழவன் சேதுபதி என்ற விஜய ரகுநாதத் தேவர் அவரைத் தம் முதலமைச்சராக்கிக் கொண்டார். சீதக்காதியின் சிறப்பை நேரில் கண்டுணர்ந்த விஜயரகுநாதர் அவரை வெறும் அமைச்சராகக் கருதாமல் தம் சகோதர