பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363


அவை இஸ்லாமிய நறுமணங் கமழுவனவாகத் திகழச் செய்ய ஏதுவாக அமைந்துள்ளன எனக் கூறின் அது மிகையாகாது. அரபு மொழியிலிருந்து பெறப்பட்ட திசைக் சொற்கள் போதிய அளவு இருந்த போதிலும் அறபு மொழிக்கும் பாரசீக மொழிக்கும் பண்டு தொட்டு இருந்து வந்த தொடர்பு காரணமாகவே அதே கருத்துடைய அறபுச் சொற்களை உபயோக்கும் அதே சமயத்தில் பாரசீக மொழியிலிருந்தும் பெறப்பட்ட திசைக் சொற்களை அவற்றிற்குப் பிரதியீடாக உபயோகிக்க உமறுப் புலவர் போன்ற காப்பிய ஆசிரியர்கள் அறபு மொழியையும் பாரசீக மொழியையும் ஒரளவு அறிந்திருந்தனர் என்னும் முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கிறது. இஸ்லாம் எங்கெங்கு பரவியதோ அங்கங்கு எல்லாம் பேசப்படும் மொழிகளிலே அறபு, பாரசீக மொழிச் சொற்கள் திசைச் சொற்களாக இடம் பெற்றிருப்பது அந்தந்த மொழிகளுக்கெல்லாம் பொதுப்படையாக அமைந்துள்ள சிறப் பியல்பு என்று தயங்காமல் கூறலாம்.

அறபு நாட்டிலும் அயல் நாடுகளிலும் உள்ள இடப் பெயர்களும் சீறாப்புராணப் பாட்டுடைத்தலைவரின் பெயரும் அவர்களுடைய உற்றார், உறவினர், தோழர், பகைவர் முதலியோரின் பெயர்களும் அங்கு வாழ்ந்த கோத்திரங்களினதும் இனத்தவர்களினதும் பெயர்களும் கணிசமான அளவு சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லால் விரிவஞ்சி விடுத்தனம். அறபு மொழியிலே வழங்கப்படும் இஸ்லாமிய மாதங்கள் பல சீறாப்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மாத்திரம் இங்கு வகைப்படுத்தி உள்ளேன்.

முஹறம் - இது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதம், புனிதமானது :::::::::::என்பதையும் இச் சொல் குறிக்கின்றது. அச்சொல்லின் நேரடிக் ::::::::::::கருத்துத் தடுக்கப்பட்டவை என்ப