பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365


மாதம் என்று கூறவர். 'திகழ்சகு பானென் விளங்குந் திங்களில்’ (ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் 3), பின்னு மவ்வருட்டஞ் சகு பானெனப் பேச, மன்ன திங்களில்' (உசைனார் பிறந்த படலம் 3).
றமளான் - இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம். முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் இச்சொல்லின் பொருள் சுட்டெரிப்பது என்பதாகும் 'பெருகதி றமளானென்னப் பெருகிய நோன்பு தன்னை (பதுறுப் படலம் 256). இறமளான் பதினைந்தினில் வெள்ளியிரவில் (அசனார் பிறந்த படலம் 11).
ஷவ்வால் - இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதம். இதன் பொருள் வலை உயர்த்துதல் என்பர். பேதமற்ற ஷவ் வாலென வுரைத்திடும் பெரிய, மாதம். (உகுதுப் படலம் 77).
துல்கஃதா - இஸ்லாமிய ஆண்டின் 11-வது மாதம். இதன் பொருள் போர் நிறுத்தம் என்பதா கும். பண்டைய அறபு மக்கள் போர் தவிர்த்த மாதம் ஆகையால் அப்பெயர் பெற்றதென்பர், சாற்று துல்சயிதாவெனு, மேற்ற மாதமா மேல்வையில் (பதுறு சுகுறாப் படலம் 1).