பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சீறாப்புராணமும் சின்னச்சீறாவும்

நாஞ்சில் நன்மொழியோன், M. A.,

புலவரேறு உமறு இயற்கை யெய்தியதால் திடுமென ஹிஜ்ரத்துக் காண்டம் உரனிக் கூட்டத்தார் படலத்தோடு சீறாப்புராணம் நின்றதா?

சுவடிகள் அல்லது ஏட்டுப்பிரதிகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லையா?

முற்றமுழுதும் இல்லாது சீறாப்புராணம் கீழக்கரையில் வள்ளல் அபுலகாசீம் இல்லத்தின் முன் அரங்கேறியதா?

புலவர் உமறுவின் மகனார் வாவணப் புலவரோ, அவர் மகனார் களஞ்சியப் புலவரோ சீறாப்புராணத்தினை ஏன் முற்றுப் பெறச் செய்யவில்லை?

இந்த வினாக்கள் ஆய்வாளர்களிடையே இன்றும் விடை காண இயலாமல் நின்று நிலவுகின்றன.

'சீறா குறையாக நிற்றலால்தான் சின்னச்சீறா தோன்றலாயிற்று. 'பனீ அகமது மரைக்காயர்' என்ற சீரியர் சீறாவில் விடப்பட்ட பகுதிகளான பெருமானாரது அரசு நிலை தொடங்கி வபாத்து முதலாம் பகுதிகளை 39 படலங்களில் 1829 திருவிருத்தங்களில் பாடினார். இப் பெருந்தகையின் முயற்சியினால் சீறாப்புராணம் முற்றுப்பெற்ற காவியமாயிற்று. இதனையும் இணைத்துப் பார்க்கையில், சீறா நாற் பயனும் அடங்கிய திறம்பெறும் பெருங்காப்பியமாகத் திகழ்கிறது. ஆதலால் காப்பிய இலக்கணப்படியும், தமிழ் இலக்கிய மறபின்வாறும் கற்றோர் அனைவரும் இம்முடிவை ஏற்பர் என்பதில் ஐயமில்லை."[1]

  1. 1. இலங்கை அ. எஸ். அப்துஸ்ஸமது: "சீறாப்புராணம் நாற்பயனும் பயக்கும் பெருங்காப்பியமே...கட்டுரை, (மணிவிளக்கு-ஜூன் 1972)