பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368


தொட்டுத் துவக்கி நிறைவு செய்கிறார். இதில் ஒப்பு உறழ்வுக்கு அதிக இடமில்லை என்றே கொள்ளல் வேண்டும். ஏனெனில் சின்னச்சீறா தனிக் காப்பியமல்ல, காப்பியத்தை நிறைவுபடுத்த-முற்றுப்பெறச் செய்ய வந்த ஓர் ஒட்டுத் துணைக் காப்பியம்.

சீறாப்புராணம் நின்ற பகுதிக்குப் பின்னர்தான் பெருமானாரின் முழுமைபெற்ற வாழ்வுப் பகுதி,-சோதனைகளுக்கிடையிலும்-சாதனை பல புரிந்து-மக்களுக்குப் போதனை புகட்டிய புகழார் புனித வாழ்வுப் பகுதி அமைந்துள்ளது. எனவே அப்பகுதிகள் காவியத்தில் இடம் பெறுகையில் பல ஆயிரக்கணக்கான பாடல்களாக விரிவு பெற வகையுண்டு. ஆனால் புலவர் பணியோ, நபி அவர்களின் வாழ்வை விரைந்து பாடி முடித்திடவேண்டும் எனும் வேணவாஉணர்ச்சி உந்தலின் வெளிப்படை, அப்படலங்களின் போக்கு ஒருவாறு காட்டும். அதுமட்டுமின்றி, சின்னச்சீறாவில்,விடுபட்ட சில செய்திகளைக் கொண்டு 'சீறா இரணடாம் வால்யூம்' பிறிதொரு சான்றாகும். அந்த விரைவிலும் 1829 பாக்களில் நிறைவு செய்த போதிலும். காப்பிய இணைப்புக்கு எல்லா வகையிலும் பொருத்தமுறப் பாடும் பெருமை சேர்த்துள்ளார்.

உமறுப்புலவரை அடியொற்றியே சின்னச் சீறாவை அணிபெறப் பாடியுள்ளார். பனீ, சீறாக்காப்பியத்தின் மூழ்கித் திளைத்த இவர், பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உமறுவைப் போன்றே சிறப்புறப்பெய்துள்ளார். போர்ப் படலங்களைக்கூட அவ்வாறே பாடும். வல்லண்மையைக் காணலாம். எனினும் உமறுவின் போர்ப்படலமும் பனி பின் போர்ப்படலமும் ஒப்பு உறழ்வுக்கான தனிப் பொருளாக அமையும், உமறுவின் சாயலும், தாக்கங்களும் சின்னச்சீறாவில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இதனுள் காணப் பெறும் கற்பனைகள், வருணனைகள், அலங்கார