பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373

அக்கணத்தே நோவு அகன்று, வாழ்நாள் முழுவதும் கண் நோவு இன்றி இருந்தது, (306)

(இ)சுல்லாம் என்னும் எகூதியின் மனைவி செயினம்பு என்னும் மடவாள் மறிஅறுத்து அதில் விடந்தடவி நெய்யில் முறுகப் பொரித்து பாத்திரத்தில் வைத்து மூடிக்கரத்து ஏந்தி, பெருமானார் முன் படைக்க, அதனைக் கருணை நபி உண்ணத் தெசடங்குகையில்,

நல்லா பம்சேர் துறக்கமனை
நாப்பண் சுடரே புவிக்கரசே
கல்லாம் என்ப வன்மணந்த
தொகை செயினம்பு அவள் உம்மைக்
கொல்லாம் என்னும் உள்ளக்குறிப்பில்
கொண்டு கரிய விடம் அதனை
பல்லா கிரியின் உடன்சேர்த்துப்

படைத்தாள் என்றன் பால்......
[351]

என அது உரைத்தது, இருந்தும், சிறியார் செய்த தீவினை யைப் பொறுப்பார் பெரியோர் (355) என்பதுபோல பெருமானார் அவளை மன்னித்தார்.

திருமணச் செய்திகள்

பெருங்காப்பிய இலக்கணம் கூறும் ‘தண்டியலங்காரம்’ நன் மணம்புரிதல் என்ற கூறுபாட்டைக் குறிப்பிடும். அவ்வழியில் உமறுப்புலவர் மணம்புரி படலம், (நாயகம்-கதீஜா நாயகி) பாத்திமா திருமணப்படலம், (நாயகத்திருமகள். அலியார்) செயினபு நாச்சியார் கலியாணப் படலம் (நாயகம்-செயினபு நாச்சியார்) என்ற மூன்றினை அமைத்துள்ளார்.

மணம்புரி படலத்திற்கும் செயினபு நாச்சியார் படலத்திற்கும் இடையில் நாயகம் செய்து கொண்ட ஐந்து மணம்புரி நிகழ்ச்சிகள் வருகின்றன. அதனை உமறு. பொருந்து மாரமுதை யபுஷாவெனும் பூவையை மணந்த செய்தி