பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

375

என மறை மூன்று உணர்ந்து தேர்ந்த எகூதிப் பாதிரி விளக்கம் தந்தார். ‘சொற்ற கனாவின் பலன் கேட்டுத் துணைககண் சேப்பக் கற்ற மறைதேர் முகம்மது மேல் காமுற்றதனால் இக்கனவு இன்று உற்றது. அதுதான் இத்தழும்பு’ என்றாள் உடனே கினானை வெறுத்து இற்றை நாள் வரைக் நம் உமைநாடி இருந்தேன்' என விளக்கினாள். வண்மையும் நலனும், கற்பும் வாய்மையும் திரண்டு ஒன்றாகப் பெண்மையும் குறித்த மைமூன் எனும் மயிலை மணந்த செய்தி பாடல் 582, 523 இரண்டிலும் வருகிறது.

சில செய்திகளின் சுருக்கம்

(i) அலியினைக் கூறும் பொழுதெல்லாம் ‘அலிபுலி’ என்றே பல இடங்களில் குறிப்பிடுவதைக் காணலாம்.

(ii) அமரர்கோன் ஜிபுறயீலை ‘வானவர்க்கு அரசசெனு மணிதல் இழை திகழ் புயத்து ஜிபுறயீல்’ (1621) என்றும் ‘மரகதம் வைரம் அளிரு மணிப் பொன்சிறை ஜிபுறயீல்’ (1738) என்றும் கூறுவதுடன், உமறுப்புலவர் காட்டும் ஜிபுறயீலுடன் ஒப்பு நோக்கி ஆயத்தக்கது.

(iii) இசுறாயில் யார்? என்ற வினாவின் விடையை விரிக்கின்ற விதம் காண்போம் ‘ஊண் அமர் எடலின் ஆவி உணும் மலக்கு’ (1695) காட்டுகிறது.

(iv) 'எவருக்கும் மவுத்து (மரணம்) தட்டும் சூக்ஷம் இல்லை' (1519) எனும் உலகியல் இயற்கை நியதி உரைக்கின்றது.

(v) தொழும் முறையினை, 'கருதியின் முறை வழாமல் தொழுதனர்' (1612) என்று காட்டுகின்றது.

(vi) அபூபக்கர் சித்தீக் ஹஜ்ஜிற்கும் போந்த படலத்தில் ஹஜ் கடமைகளாற்றுவதை, புண்ணிய தலத்தில் பண்ணூம் நற்கருமங்களை - சபா மர்வா மனை (1535) ஹரம் (1537) தவாபு அறபா மலை (1538) கற்கள் எறிதல் (1547)