பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

ஆடு அறுத்துப் புல் ஈதல் (1547) கஃபத்துல்லாவை ஏழு முறை சுற்றிப் பணிதல் (1548) என ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகிறது.

(viii) நபியுல்லா 366 புத்து-விக்கிரகங்களை உடைத்து எறிந்ததனை (1050) கூறுகிறது.

(viii) ‘பறா அத்’ என்னும் சூறத் இறங்கியதை (1379, 1830) தருகிறது.

(ix) ‘கற்பூர தீபம் ஏற்றல்’ (1278) கும்பங்கள் எடுத்தல் (1279) குரவைகள் (1284) ஆகியவற்றையும் காட்டுகிறது.

(x) பெருமானார் வபாத்தான பொழுது, ‘கதுமத்து’ மகன்கள் சுதன் அசதுவும், அலி, சயிது, உசாமத்து, ஐவரும் உலகம் தாங்கிய தடம்புய இறசூல் மிக்கநன் மெய்யில் அரும்புனல் பெய்து குளிப்பாட்டிய செய்தியை (1807) கூறி, அபுபக்கர் சித்தீக் (ரலி) இமாமாக நின்று மையத்துத் தொழுகை நிகழ்த்திய செய்தியையும் (1818) கூறுகிறது.

(xi) ‘வள்ளம்’ எனும் சொல் (447, 453) நாழி மரக்கால், வட்டில்) அளவுக் குறிப்பாக கோவை மாவட்டத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தீயினைக் கூறும் பொழுதெல்லாம் ‘வடவைத் தீ’ (731. 752) எனக் கூறும். மலையாளத்தில் பயன்படுத்தப்படும் உத்திரம்' (பதில்) எனும் சொல் கையாளப்படுகிறது (451). ‘இம்மி’ (577-591) 'தட்டுமுட்டு’ (893) எனும் சொற்களும் உயிர் கொண்டு உலவுகின்றன.

(xii) போர்க் கருவியான வேல் அருந்தமிழ்ச் சொற்களால் ஒப்பினை செய்யப்பெறுகின்றது. அள்ளிலை வடிவேல் (55, 1202, 1250) விடுசுடர்க் குடுமி வெள்வேல், (748) நெய்தோய் நாமவேல், (730) ஒளிகதிர் இலைவேல், (503)