பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382


களும் அவர்கள் குமாரரும் பாடியிருக்கிறார்கள்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. காசிம் புவவரின் 'திருப்புகழ்' பழைய பதிப்பின் பாயிரத்தில் ஒரு பகுதி வருமாறு:

"உமறுப் புலவரென்றுறு மதியுடையோர்
செய்தவத் துதித்த செல்வ னெனவரும்
வையகம் புகழும் வாவணப் புலவர்,

இதிலிருந்து உமறுப்புலவரின் மசனான வாவணப் புலவரும் வையகம் புகழப் பெரும் புலவராகத் திகழ்ந்தாரெனத் தெரிகிறது.

சீறாவை அண்மையில் பதிப்பித்த திருவரசன் அவர்களும் 'சீறாவின்' கடைசிப்பகுதியில் பா நடையில் சற்று மாறுதலும் வேறுபாடும் உள்ளது என்று கருத்து தெரிவிக்கிறார்கள், எனவே வாவணப் புலவரும் சேர்ந்து சீறா'வை பாடியிருப்பாரா என்பதை புலவர்கள் மேலும் ஆய்தல் வேண்டும்.

முதல் பதிப்பு

இனி சீறாப்பதிப்புகளையும் உரைகளையும் பார்க்கலாம். சீறாப்புராணம் முதன்முதலின் 1849 இல் சேகனாப் புலவரால் வெளியிடப் பெற்றது, அண்மையில் 1974 இல் வெளி வந்தது கவிஞர் நாச்சிக் குளத்தாரின் பதிப்பாகும் இந்த 135 ஆண்டுகளுள் சீறா பல பதிப்புகளைக் கண்டுள்ளது. அத்துடன் சீறா உரைகளும், உரைநடைகளும் பல தோன்றியுள்ளன. சீறாப்புராணத்தைத் தழுவிக் கீர்த்தனம் நாடகம், வண்ணம், விளக்கு, வெண்பா போன்ற பல நூல்களும் தோன்றியுள்ளன.

முதன் முதலாக அச்சேறியமுஸ்லிம் தமிழ்க் காப்பியம் சீறாப்புராணமேயாகும். தமிழ் நூல்கள் தமிழ் நாட்டில் கி. பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சிடத் தொடங்கப் பெற்றன. எனினும் தமிழ் இலக்கியம் முதன் முதலாக அச்சேறியது 1812 ஆம் ஆண்டில் தான்.