பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

397

கள், விருத்தம், வெண்பா ஆகியவை பலவகைப் பாக்களில் ஆய நூல். 1878 இல் பதிப்பிக்கப்பெற்றது,

சீறா வண்ணம்

வண்ணப்பாட்டு என்பது புதுவகைச் சந்தப் பாட்டு பெருமானின் சரித முரைக்கும் வண்ணப்பாட்டை இயற்றியவர் மேலூர் கல்விக் களஞ்சியப் புலவர். 1838 இல் அச்சானது.

சீறா விளக்கு

செயிக் முகம்மது லெப்பை ஆலிம் அவர்கள் இயற்றிய சீறா விளக்கு’ என்னும் 48 பக்க நூல் சீறாவின் கருத்தை உள்ளடக்கி எழுந்தது (1894).

சீறா வெண்பா

சீறாப்புராணச் செய்தியை வெண்பா வடிவில் தரும் முயற்சியில் பாவா முகியித்தீன் அவர்களால் இயற்றறப் பெற்றது சீறா வெண்பா ஆகும். நபியவதாரப் படலச் சரித்திரத்தை 25 வெண்பாக்களில் இந்நூல் தந்துள்ளது (1910).

இந்நூல்களில் பெரும்பாலானவை இன்று பார்ப்பதற்குக் கூட கிடைப்பதில்லை. இவற்றை மீண்டும் பதிப்பித்துச் சீறாவின் பெருமையைச் சீர்மையுடன் பரப்ப வேண்டியது தமிழ் மக்களனைவருடைய கடமையாகும்.

துணை நூல்கள்

அப்துற்-நஹீlம்: முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள். 1957

உவைஸ் (எம். எம்.); இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காட்பியங்கள். 1973