பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

411


பொதிந்த பூனொடும் ஏது மின் எனக்களி பொங்கி
அதிர்ந்திடக் கரமசைத்தல் போல் அசைந்தன கொடிகள்." [1]

"மதுக்கொண் மாளிகை நாற்றிதன் மணிபல குயிற்றிச்
செதுக்கி மின்னுமிழ் தமனியத் தகம்புகள் செறித்து
விதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப்
புதுக்கு வான் தொழில் புரிந்தபோல் அசைந்த பொற் கொடிகள்."[2]

"சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக்
கவிந்த கார்ச்குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண்சுதைப் பளிக்கு மேல் நிலை வயின் நின்று
குவிந்த கைவிரித் தழைத்தபோல் அசைந்தன கொடிகள்," [3]

உகுதுப் போர்க்களத்தில் இருவகைக் கொடிகளைக் காட்டுகின்றார். அவற்றில் ஒன்று:

"அல்லும் கல்லும் ஒத்தனமனக் குபிரவர் படையில்
செல்லு செல்லுமென் றேவின விசிறியின் திரள்கள்
கொல்லுங் கொல்லுமென் றுரைத்தன பல்லியங் குமுறல்
வெல்லும் வெல்லுமென் றாடின விடுநெடுங் கொடிகள்" [4]

இப்பாடலில் "முஸ்லிம்களே! வெல்லுங்கள்! வெல்லுங்கள்!" எனறு கரமசைத்து ஊக்குவிக்கும் கொடிக்கரங்களைக் காணுகிறோம்.

  1. 1. சீறா, ஷாம்நகர் புக்க படலம் 17
  2. 2. சீறா ஷாம்நகர் புக்க படலம் 18
  3. 3. சீறா. ஷாம்நசுர் புக்க படலம் 19
  4. 4.சீறா. உது துப் படலம் 96