பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

முட்குடக்கனி
கோகரப் பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய்
சிலைநுதல்
கயற்கண்
பவளவாய்

முதலிய உவமத் தொகைகளும் உவகையூட்டுகின்றன.

தெள்ளமுலனைய முகம்மது நபி’
‘வடுப்பிளவனைய கண்’
‘துய்ய நூல் விரித்தன்ன நரை’
‘இன்னமுதக் கனி எனும் கலிமா’

முதலிய உவமைகளும் உமறுப்புலவரின் முத்திரைகளில் சிலவாகும்.

முடிவுரை

இவ்வாறு உமறுப்புலவர் அரிய உவமைகளை இனிய முறையில் வழங்குகிறார். பொருள் விளக்கம் தருவதுடன் பண்பாட்டுச் சிறப்பையும் நீதிநெறி முறைகளையும் தத்துவ நுட்பங்களையும் உவமைகளில் பொறித்து மகிழ்வூட்டுகின்றார். கற்பனை நலம் கனிந்து உயர்ந்த உவமைகளில் ஒப்பற்ற இன்பமளிக்கும் உமறுப்புலவரை உவமைப் புலவர் எனலாமே!