பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

421

முதலிய பாடல்களிலும் தொடர்களிலும் நீதி பொதிந்த பழமொழிகள் உவமைகளாக வந்து நிறைந்த பொருள் பயக்கின்றன.

தத்துவம் கூறும் வித்தகர்

உமறுப்புலவர் உவமையால் தத்துவ நுட்பங்களையும் புலப்படுத்துகின்றார்.

மழைபொழிந்து ஆறுகள் பெருகி ஓடிப் பாய்ந்தன. தடாகங்கள், ஏரிகள், குளங்கள், வயல்கள், தாமரைக் கிடங்குகள் முதலிய எல்லா இடங்களும் நிரம்பின. இதனைக் கூறவந்த கவிஞரின் கற்பனையில் தத்துவ நுட்பம் தோன்றுகின்றது. அதனை அழகிய உவமையாக அமைத்து விடுகின்றார்.

“தடமும் ஏரியும் வாவியும் கழனியும் சலசக்
கிடங்கு எங்கணும் நிறைதரப் பெருகு கிலாலங்
குடம்பை யின்பல பேதமா கியசத கோடி
உடம்பு தோறினும் உயிர்நிலை நிலையினை ஒக்கும்.”[1]

ஒரே உயிர் பலகோடி உடம்புகளிலும் புகுந்து நிற்பது உவமையாக அமைந்துள்ளது. பரமானமா எனும் ஒளிப் பிழம்பிலிருந்து ஜீவான்மா பிரிந்து வந்துள்ளது என்றும் உலக உயிர்களனைத்திலும் இறைவன் உறைந்துள்ளான் என்றும் கூறுவர் தத்துவ வித்தகர்.

உதிர்ந்த மலர்கள்

மதிமுகம்

திருநகைத்தரள மெல்லிதழ்

காந்தள் மெல்விரல்

செவ்வரி வேற்கண்

விரிக்க செங்கமலக்கரம்

  1. சீறா. நாட்டுப் படலம் 17