பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

யும், வரி வரியாக...இல்லை இல்லை வார்த்தைகளாகவே பொருத்திப் பார்ப்போமே!

"திருவினும் திருவாய்
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! "
"பொருளினும் பொருளாய்க்
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே!"
"தெளிவினும் தெளிவதாய்க்
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே"
"மருவினும் மருவாய்
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே!"
"அணுவினுக் கணுவாய்
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே!"
"மதித்திடாப் பேரொளி யனைத்தும் பொருவினும்
கருத்தனைப் பொறுத்துதல் கருத்தே!'
"வடிவினும் வடிவாய்
கருத்தனைப் பொறுத்துதல் கருத்தே!"
"பூதலத் துறைந்த பல்லுயிரின கருவினும் கருவாய்
கருத்தனைப் பொறுத்துதல் கருத்தே!"
"பெருந்தலம் புரந்த
சருத்தனைப் பொருத்துதல் வருத்தே!"

இப்படி வரிகளை, வார்த்கைகளை , பிரித்து, இணைத்து, பொருள் புரிந்து, ரசித்து மகிழச் செய்கின்ற விளக்கணி விளக்கத்திற்கு ஏற்ற பாடலாக இந்தப் பாடல் விளங்குவதைப் புலவர்கள் கவனத்தில் கொள்ளுவது பயனுடையதாகும்

"திருவினும் திருவாய்" என்று தொடங்கும் இந்தப் பாடலின் அமைப்பு, ஒரு புலவன், தான் செய்கின்ற நூலின் நோக்கம் கூறுகின்ற, பாயிரம் போன்றிருப்பதை நோக்குதல் வேண்டும்.

நூல் செய்வோன் தனது நூலினை. நுகர்வோர்க்குக் கிட்டுகின்ற பயனை முன்னுரைப்பது நல்ல பண்பு. பாயிரத்தின் சிறப்பாகவும் சுட்ட முடியும். 'திருவினும் திருவாய்'...