பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48



உமறுவின் தனித்திறன்


ஜே. எம். சாலி, எம். ஏ.

மிழில் தோன்றிய முதலாவது இஸ்லாமியக் காவியம் என்பதோடு மட்டுமின்றி சில தனித்துவ முத்திரைகளைப் பெற்றிருப்பது சீறாப்புராணத்தின் சிறப்பு. மற்ற தமிழ்க்காவியப் புலவர்களிலிருந்து சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவர் சற்ற வேறுபடுகிறார். இந்த வேறுபாடு அவருக்குள்ள தனித்திறனை, தனித்துவத்தைக் குறிப்பதாகும். உமறு ஒரு தமிழ்ப் புலவர். அத்துடன் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர். இதுதான் மற்ற சமயப்புலவர்களினின்றும் உமறுவை வேறுபடுத்துகிறது என்பதைத் தவிர வேற்றுமைபடுத்தவில்லை.இனத்தால் தமிழ்ப் புலவர்; ஏற்றுக் கொண்ட சமயத்தினால் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் என்ற இரட்டைச் சிறப்பு அவருககு உண்டு.

உமறுப் புலவர் என்றோங்கிய வள்ளல்
இந் நூலில்பியற் சீறாவென்ன
மத நூல் நாமமேசூட்டி முது பயன்
அறம் பொருள் இன்பம் வீட னைத்து மடங்கிய
திறம் பெறும் காப்பியம் செய்தனர்.

என்று புலவர் போற்றும் புலவராகத் திகழ்கிறார் சீறாப் புலவர்.

காவியம் நாற்பொருள் பயிரும் நெறித்தாக இருக்க வேண்டும் என்பது இலக்கணம். அறம், பொருள், இன்பம் வீடு என்பவை அவை இன்பச் சுவை இன்றேல் காவியம் இல்லை எனுமளவுக்கு இன்பியல் தமிழ்க காவியங்களில் தலைமையான இடம் பெறுகிறது. தன்னிகரில்லாத காவியத் தலைவனின் திருமணம், முடிசூடுதல், பொழில்-புனல் விளையாட்டுகள், மக்கட்பேறு, ஊடல், கூடல் முதலானவை பாடப் பெற்றிருக்க வேண்டும். இலக்கியத்தில் நாயக-