பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


ஒரு பெருமித நிலையை எடுத்துச் சொல்லவே கோமகளைக் குறிப்பிடுகிறார். அவ்வளவுதான்.

அபுத்தாலிப் நபிகள் பெருமானாரின் பெரிய தந்தையார், கொடையளிப்பதில் அவர் மேகத்தைப் போன்றவர், வீரமும், கல்வியும், வெற்றியும் மிக்கவர். செல்வம் குடியிருக்கும் அவருடைய இல்லத்தில் செல்வ நாயகியான கோமகள் லட்சுமி இருக்கிறாள் என்று சொல்வது பொருத்தமில்லையா? அபுத்தாலியின் வீட்டு முன் வாசலில் லட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் எப்படி?

"சலதரத்தை நேர்கரத்து அபுத்தாலிபு தன்பால்
குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய்
நலம் உறப்புகுந்து இருந்தன நாள் தோறும்வசைத்து
இலகு செல்வியும் இவர்மனை முன்றில் வீற்றிருந்தாள்"

உமறுப்புலவர் இத்துடன் நின்று விடவில்லை. மக்கா நகரின் சிறப்பை எடுத்துச் சொல்ல மகா மேருமலையைத் துணைக் கழைக்கிறார். மேரு மலையையும் சக்கரவாளக்கிரியையும், சப்த தீவுகளையும் ஆதிசேடனையும் புராணங்களில் படிக்கிறோம். ஒரு காவியப் புலவனுக்கு இவை தெரியாமலிருக்க முடியுமா? உரிய இடத்தில் இவற்றை எடுத்தாள்வது புலவரின் கவித் திறனாக அமையும் அல்லவா?

"வடகரைப் புடைசூழ் நிலத்து எழுதீவும்
வரவழைத்து ஒரு தலத்து இருத்தித்
தடமுடிக் கிரணத் திகிரி மால் வரையைச்
சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி
இடன் அற நெருங்கும் பெரும்புறக் கடலை
இதற்கு அகழ் எனப் பெயரிட்டுப்
பட அரவரசன் திருமுடி மணியைப்
பதித்தது மக்கமா நகரம்'.

இது உமறுவின் பாடல். மேருமலையினால் சூழப்பட்ட உலகின் ஏழு தீவுகளும் ஒரே இடத்தில் திரண்டிருந்தால் எப்படி