பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

நபிநாயகத்திடம் வந்த உமறு கத்தாபுவை நோக்கி எங்கு வந்தீர் என்று கேட்டபோது அவர் கூறியதாக உமறுப்புலவர் இசைக்கும் பாட்டு இது:

"வரிசை நபியே! முகம்மதுவே!
வானோர்க் கரசே! புவிக்கரசே!
உரிய தனியோன் முதற் றுதே!
உமது கலிமா உரைத்தபடியே
அரிய மறை தேர்ந்(து) ஈமான் கொண்டு
அறந்தா றொழுகும்படி கருத்திற்
கருதி இவனிவ் வடைந்தேன் என்
றுரைத்தார் உமறு காத்தாபே"[1]

கீழ்க்கண்ட கடவுள் வாழ்த்துச் செய்யுளின் ஒசைநயத்தைக் கண்டு மகிழலாம்.

"ஆலகால வாரிபோல மாகொடுரம் ஆகிய
காலகேள்வி தானடாத காரணீகர் ஆளவே
காலமீதில் ஆதிதூதர் சாரமேவு வாழ்வினோர்
நாலொடாறு பேர்கள் பாதம் நாவில் நாளும் ஒதுவாம்"[2]


  1. 1. உமறுத்தாபு ஈமான் கொண்ட படலம் 90
  2. 2. சீறா கடவுள் வாழ்த்து 44