பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உமறுப்புலவரின் இலக்கியத்திறன்

டாக்டர் க. ப. அறவாணன்,


எம். ஏ., எம். லிட் பிஎச். டி.

எது இலக்கியம்? செய்புள் வடிவத்திலேயே செய்யப்பட்ட எல்லாம் இலக்கியமா? பாட்டு உருவத்திலே இசைக்கப்பட்ட எல்லாம் இலக்கியமா? கதைக்கப்படும் கதை எல்லாம் இலக்கியமா? அளக்கப்படும் கற்பனை எல்லாம் இலக்கியமா? விரிக்கப்படும் வருணனை எல்லாம் இலக்கியமா? அல்ல, அல்லவே அல்ல. எந்தத் தனி ஒன்றும் இலக்கியம் ஆவதில்லை. இலக்கியத்தை ஆக்குவதில்லை. தேவையான எல்லாம் தேவையான அளவு, தேவையான அழகில் சொல்லப்படுவதே இலக்கியம் , சுவைத்து உண்டு மகிழும் அல்வாப் பண்டம் கோதுமை ஒன்றால் மட்டும் செய்யப்படுவதா கோதுமையுடன கூடச் சில பொருள்களும் பக்குவமாகச் சேரும்போதே சுவையான அல்வாக் கிடைக்கும். இலக்கியம், பலபொருள்களின் கூட்டுக் கலவையே! பாவலனின் நெஞ்சப் பாண்டத்தில் செய்யப்பட்ட பாட்டுப் பண்டம் அது

படிப்பாளரின் அறிவுப் பசிக்கு படைப்பாளனின் படைப்பு விருந்தாக நின்று பசி தீர்க்க வேண்டும்; மருந்தாக நின்று உள்ள நோய்களைப் போக்க வேண்டும். விருந்தும் மருந்தும் ஓரிலக்கியத்திலே இருந்து இனிப்பது தமிழிலக்கிய மரபு. இலக்கியத் திறன் என்றால் என்ன? எது எது அல்லது எவை எவை, இலக்கியத்தை இலக்கியம் ஆக்குகின்றதோ அதுவே அல்லது அவையே இலக்கியத்திறனின் கூறுகள்.

இலக்கியத்தை இலக்கியம் ஆக்கும் அடிக்கூறுகளே அதன் திறன். அதனை எடுத்துக் காட்டுவதே திறனாய்வு! அடிக்கூறுகளை அறிவதும், அவற்றை அறிவிப்பதும் எளிதன்று. கேட்பது இனிது, கொடுப்பது எளிதன்று. இலக்கி