பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

4. அப்பனை மிஞ்சிய சுப்பர்கள் ! ‘ கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் படைத்து பழிவாங்குகிறா ன் என்று யாரோ சொல்லி யிருப்பதாகக் கேள்வி. அப்படிக் கடவுளைப் பழிவாங்க எழுந்த சாதனங் களில் கோயில் பூஜை, திருவிழா என்கிற பண்பு முதலாவது என்று கொள்வோமானால் அடுத்த ஸ்தானம் நிழற்படத்துக்கே உ ரி ய து. கடவுளர் களைபும் அவர்கள் பண்பையும் மூலதனமாக்கி தாம் வாழ்ந்து வயிற்றையும் பணப்பெட்டியையும் பெருக்க வைக்க் கி கும்பல்களிடையே அக்ர தாம்பூலம்' புரோகிதவர்க்கத்துக்கும் பூசாரிகளுக்கும் என்றால், இரண்டாவதாக கவனிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் சினிமாப் படக்கலை நிபுணர்கள் தான். இக்கக் கும்பல்கள் கலையின் பெயராலும் மக் களின் தலையைத்தடவி தொழிலாளிகளின் உழைப் பைச் சுரண்டி பணமூட்டைகளாக டாம்பீக வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். இவர் களு க்கு கலையோ, மனிதப் பண்போ, கடவுள் தத்துவமோ முக்கியம் அல்ல. பணம்.பணம்.பணம் தான். இது தான் அவர்கள் வாழ்வு, உயிர்மூச்சு, லட்சியம் எல்லாம். இவர்கள் போக்கினால் தான்திரைப்படம் உருப் படாமல் அன்று கண்ட மேனி மாறாமல் பழைய க று ப் ப னா க வே இருந்து வருகிறது. படக்கலை முன்னேற வேண்டும். கலையின் மூலம் மனித அறிவை விரிவு செய்யத் தூண்டி விட வேண்டும்; சமுதாய் வாழ்க்கைத் தரம் உயர வழிசெய்ய வேணும் என்ற நல்லெண்ணம் ஒரு சிறிதும் இவர்களுக்கு இல்லை.