பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

荔 பம்மாத்துக்காரர்கள். பெயர் அழகாக, சமூகப்படம் போல் தொனிக்கிறது. ஆராயப் போ னா ல் கதை பழங்குப்பை முன்பே படமாக வந்ததுதான். ஆகவே ஆளைப்பார்த்து மயங்காதே. ஊது கா மாலை என்றது போல - ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும்பே னாம்' என்ற தன்மையிலே - பெயரைக் கண்டு மயங் காதே. பித்தலாட்ட எத்து வேலை! என்று எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. படமுதலாளிகள் பழைய கள்ளேயே புதிய ஜாடியில் அடைத்து விக்கத் துணிந்திருக்கிறார்கள். அது தான் விஷயம் புராணக் கதைகளுக்குத் தான் மெளஸ் அதிகம் என்று கண்ட படமுதலாளிகள், தரை மகாஜனமும் சேலைகட்டிய பகுதியும் கடவுளரின் லீலாவினோத ரசிகர்களாகவே இருக்கிறார்கள் என்று உணர்ந்து விட்டதாக நம்பிய கலைத் தொழிலாளிகள் எல்லோ ரும் எல்லாப் படங்களிலும் அப்பாவிக் கடவுள்களை ஆடும்படி கட்டாயப்படுத்தினர். அவசியம் நேரும் போது எம் இஷ்டம் போல் தோன்றி அருள் புரிவோம் என்ற பண்பாடு உடைய பிறைசூடிப்பித்தன். அரவுத்துயில் பயிலும் திருமால் மற்றுமுள்ள சில்லறைத் தெய்வங்கள் எல்லோரை யும் தங்கள் இஷ்டம் போல் வரவழைத்தார்கள். மாயமோதிரத்தைத் தேய்த்தவுடன் வர வே ணு ம் என்று கட்டுப்பாட்டுக்குள் அ ட ங் கி ய அலாவுதீ னின் பூதம் போல பட வு ல க பிரம்மாக்களின் ஆசைக்குக் கட்டுப்பட்டு ஆடவேண்டிய துர்ப்பாக்கி யம் கடவுள்களுக்கு ஏற்பட்டுவிட்டது.