பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

 திறமையைப் போற்றி, உழைப்புக்கு உரிய மதிப்பு கொடுங்கள். பழையவர்கள் என்பதற்காக பழம் பெருச்சாளிகளுக்கும்,"சதைப் பிண்டங்களுக் கும் வீணாகப் பணம் அள்ளிக் கொடுப்பதைவிட பல புதிய திறமைசாலிகளை, உற்சாகமுள்ள இளைஞர் களைத் தேர்ந்து பொருத்தமான பாத்திரங்களில் நடிக் கச் செய்து முன்னேற சந்தர்ப்பம் அளியுங்கள். "பதினோராயிரம் அடிக் கட்டுப்பாடு தொலைந் தது. விட்டது தொல்லை! என்ற களிப்பிலே கண்ட படி ஆட்டம் பாட்டு பழம் புராணம் முதலியவற்றை சுட்டுத் தள்ளி காசையும் பிலிமையும் காலத்தையும் உழைப்பையும் கரியாக்குவதில் போட்டியிடுகிற பட முதலாளிகளே! நீங்கள் என்ன செய்கிறீர்கள் என் பதை நின்று நிதானித்துப் பாருங்கள் கலை உருப்பெற்ற தென்ன இலங்கி மிளிரும் ஆங்கிலப்படங்களைப் பார்த்தும், வடநாட்டுப் படங் களைக் கண்டும் உங்களுக்கு உள்ளத் தெளிவும், கலைப் பற்றும், தமிழினப் பற்றும் தோன்றவில்லை யென்றால் உங்களை - நீங்கள் பூஜிக்கிற-கடவுளர் கள் கூடக் காப்பாற்ற முடியாது. தங்களைத் தாங் களே காப்பாற்றிக் கொள்ளும் சக்திகூட அந்தக் கட வுள்களிடம் இல்லையே! குமுறுகின்ற தொழிலாளர் உணர்வுத்தீ திக் கெட்டும் பரவும். அன்று சமுதாயப் புல்லுருவி களான, கலைக் காளான்களாகிவிட்ட பணமூட் டைகள் பஞ்சாகப் பறக்கும். இது உறுதி.


கலையே வளர்! தொழில் மேவிடு! கவிதை புனை தமிழா!