பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சின்னஞ்சிறு பாடல்கள்.pdf
பறவைக் கப்பல்


அதோ, அதோ பறவைக் கப்பல்,
ஆகாயத்தில் செல்லுது !
அதிசயமாய் எல்லோ ரையும்
அங்கே பார்க்கச் சொல்லுது.

வெள்ளைப் பறவை போலே அதுவும்
மேலே நமக்குத் தோன்றுது.
மேகத் திற்குள் புகுந்து புகுந்து
வேடிக் கையும் காட்டுது.

மனிதர் தம்மைத் தூக்கிக் கொண்டு
வானத் திலே பறக்குது.
வயிற்றுக் குள்ளே பத்திரமாய்
வைத்துக் கொண்டே செல்லுது.

காடு மேடு கடல்க ளெல்லாம்
கடந்து கடந்து செல்லுது.
கண்ணை மூடித் திறப்பதற்குள்
காத துாரம் தாண்டுது !

21