பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதைக் கேட்டதும் அண்ணாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “என்ன, நம் தம்பியா அப்படிச் சொல்லுகிறான்! ஒருவேளை... நாம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு அப்படியே சொல்ல ஆரம்பித்துவிட்டான் போல் இருக்கிறது!” என்று நினைத்தார். பிறகு 'சரி, உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் இனி, அவனையே வரச் சொல்லுகிறேன்' என்றார். அப்புறம் வாரா வாரம் தம்பிதான் புராணம் சொல்லி வந்தான். அவன் திறமை சென்னை நகரம் முழுவதும் பரவியது. மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து அவனுடைய பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள். இதை அறிந்த அண்ணாவுக்கு முதலில் நம்பிக்கை ஏற்பட வில்லே. ஒரு நாள் அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு மெதுவாக வந்தார். மறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தம்பியின் பேச்சை உற்றுக் கேட்டார். கேட்கக் கேட்க அவரது மகிழ்ச்சி பெருகியது. அப்படியே பரவசமாகி விட்டார். “இப்படிப்பட்ட தம்பி கிடைத்ததே நாம் செய்த தவப் பயன்தான்!” என்று நினைத்துப் பூரிப்பு அடைந்தார்.

இப்படிக் கூட்டத்தாரையும், கூடப் பிறந்த அண்ணனையும் வியப்படையச் செய்த அந்தத் தம்பி யார் தெரியுமா? அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை இராமலிங்க அடிகளாரே தான்!

10