பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

பிழைத்துவிட்டான்!
    வீட்டுக்காரரும் அவருடைய நண்பரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
    “உங்களுடைய பையனைக் காணோமே! எங்கே போய் இருக்கிறான்?” என்று கேட்டார் நண்பர்.
    “எங்கே போயிருப்பான்! ஏதேனும் ஒரு மூலையிலே முட்டை மேல் உட்கார்ந்து கொண்டிருப்பான்.”
    “என்ன! முட்டைமேல் உட்கார்ந்து கொண்டிருப்பானா! ஏன், உட்கார வேறு இடம் கிடையாதா?”
    “அவன் செய்வது எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும். நேற்று நடந்ததைக் கேளுங்கள். அவனை வீட்டில் வெகு நேரமாய்க் காணோம். ‘எங்கே போய் இருப்பான்!’ என்று தேடிப் பார்த்தேன். கடைசியில், அவன் வீட்டின் பின்புறத்திலே ஒரு மூலையில், சில முட்டைகளைக் கீழே வைத்து அவற்றின் மேலே உட்கார்த்து இருக்கக் கண்டேன். “என்னடா இது, முட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாய்!” என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன தெரியுமா பதில் சொன்னான்? ‘நம் வீட்டுக் கோழி செய்கிறதே, அதே போல் நானும் முட்டையிலிருந்து குஞ்சை வெளியில் கொண்டு வரப் போகிறேன்' என்றான்!’
    “அடேயப்பா! இந்த வயதிலே அவன் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான் போலிருக்கிறது!”

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் சென்றிருந்த அந்தப் பையனும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமயிர் கலைத்திருந்தது. உடை முழுவதும் புழுதி படிந்திருந்தது. அவனைக் கண்டதும், ‘என்னடா இது அலங்கோலம்?’ என்று கேட்டார் அவன் அப்பா.

13