பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உடனே அவன் பதில் சொல்ல ஆரம்பித்தான்; “நான் வரும் வழியிலே ஒரு குதிர் இருந்தது. அதன் மேல் பகுதியில் வட்டமான ஒரு மூடி இருந்தது. அந்த மூடியைத் திறந்து கொண்டு அதன் வழியாகக் கோதுமையை உள்ளே கொட்டிக் கொண்டிருந்தார்கள், சில வேலையாட்கள். அவர்கள் கொட்டும் கோதுமை உள்ளே போய் எப்படி விழுகிறது என்று பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. உடனே, குதிரின் மேல் ‘விறு விறு' என்று ஏறினேன். உச்சியிலிருந்து ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது... ... கால் இடறி, ‘தொப்’பென்று உள்ளே விழுந்து விட்டேன்.”

    "ஐயோ! அப்புறம்...?” என்று பதற்றத்துடன் கேட்டார் அப்பா.
    “நல்ல காலம், உடனே வேலையாட்கள் என்னைக் காப்பாற்றி விட்டார்கள். இல்லாத போனால், உள்ளேயே அமுங்கிச் செத்துப் போயிருப்பேன்!” என்றான் அவன். 
 

அவனுக்கு மட்டுமல்ல; நம் எல்லாருக்குமே அது நல்ல காலம்தான்! ‘ஏன்?’ என்று கேட்கிறீர்களா? அவன் அன்று இறந்து போயிருந்தால், இன்று நாம் கிராம போனில் பாட்டுக் கேட்க முடியாது; சினிமாக் கொட்டகையில் படம் பார்க்க முடியாது, வீட்டில் “சுவிட்” சைப் போட்டு விளக்கை எரியவைக்க முடியாது. இந்த அற்புதங்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவனே அந்தச் சிறுவன்தான்! அவன் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்.

17